Free Web Hit Counters
எல்லா நதிகளும் கடலை நோக்கி.... எல்லா மனித நேயப் பயணங்களும் காரல் மார்க்ஸை நோக்கி.....!
"புத்தம் புது பூமி! வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்....." -கவிப்பேரரசு வைரமுத்து.....







"அரசியல் கோமாளிகளின் நையாண்டி நக்கல் காமெடி கலாட்டா!"

Saturday, September 15, 2007


Dear comrades!

S.A.Perumaal' s article on Bharathi..in Sep 11 theekkathir. .

கிருதயுகம் பாடிய யுகப் புரட்சிக் கவிஞர்

-எஸ்.ஏ.பெருமாள்

நாமறிந்த கவிஞரிலே யுகம் தாண்டிச் சிந்தித்த மகா கவிஞன் பாரதி மட்டுமே. சாதி சமயத் தளைகளை அறுத்தெறிய அறைகூவல் விடுத்த தன்னிகரில்லாக் கவிஞர் அவர் மட் டுமே. 39 வயதுக்குள் கதை, கவிதை, கட்டுரை என்று மலைபோல் எழுதிக் குவித்த மாகவிஞன் பாரதி. அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என அனைத் துத் துறைகள் பற்றியும் எழுதியவர் பாரதி மட் டுமே.
சாதியைச் சாடிய புலவன்
சாதி பேதங்களை எதிர்த்தும் சமூகத்தில் பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்தும் முத லில் முழங்கியவர் பாரதி. தமிழகத்தில் திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே பாரதி சாதி எதிர்ப்பிலும், பிராமண எதிர்ப்பிலும் முன் நின்றவர்.
“நிகரென்று கொட்டு முரசே - இந்த
நீணிலம் வாழ்பவரெல்லாம்
தகரென்று கொட்டு முரசே - பொய்மைச்
சாதி வகுப்பினையெல்லாம்”
என்று சாதிய சமத்துவத்தைப் பிரகடனம் செய் தார் பாரதி. இதை நூறாண்டுகளுக்கு முன்பே அவர் எழுதியிருப்பதிலிருந்தே அவர்தான் தமி ழகத்தில் சாதி எதிர்ப்புக்கு மூலவர் என்பதை அறிய முடிகிறது. மேலும் -
“மனிதரில் ஆயிரம் சாதி - என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
ஒன்றுண்டு மானிடச் சாதி - பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்”
இதில் சாதிப்பிரிவினை என்பதே ஒரு வஞ் சகச் செயல் என்று குறிப்பிடுகிறார். இயற்கை யில் எல்லாம் சமமே என்ற பொருளில், ‘காக்கை குருவி எங்கள் சாதி - கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று பாடியவர். மனித குலத்திற்கு அப் பால் போய் பறவைகளையும், கடல் மலையையும் தன் இனமாய் கருதிய புலவர் பாரதியைத் தவிர எவருமில்லை. அதைவிட பாரத சமுதாயம் என்ற தனது பாடலில் -
“எல்லோரும் ஓர்குலம்- எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை- எல்லோரும் ஓர்நிலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
என்று பாடினார்.
பாரத நாட்டின் ஒருமைப்பாடு குறித்து ‘செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பாடிய பாரதி இதில் எல்லோரும் இந்திய மக்கள் என்று கூறுகிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராக பன் மொழிப்பட்ட இந்தியா ஒன்றுபட்டு நிற்க வேண் டுமென்று அவர் கனவு கண்டார். இதற்கு எடுத் துக்காட்டாக அவரது ‘சிந்து நதியின் மிசை நில வினிலே’ என்ற பாடலையும் குறிப்பிடலாம்.
தீண்டாமைக் கொடுமைகள் இன்றளவும் நீடிக்கிறது. பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற மனுநீதிப் பாகுபாட்டால் மனம் பதைக்கும் கொடுமைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படுகின்றன. தலித் மக்களை மலம் தின்ன வைப்பது, அவர்கள் வாயில் சிறுநீர் கழிப் பது, மலம் அள்ளவைப்பது, பெண்களைக் கேவ லப்படுத்துவது, ஆலயத்தில் நுழைய அனும திக்க மறுப்பது, சுடுகாட்டுக்குப் பாதை தர மறுப்பது, பொதுக் கிணற்றில் நீரெடுக்க அனுமதி மறுப்பது என்று தலித்துகள் மீது தீண்டாமை ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன.
ஒரு சிட்டுக் குருவிகூட மனிதனைக் கேலி செய்வது போல பாரதி பாடுகிறார்.
“கேளடா மானிடா வா - எம்மில்
கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமையில்லை - எல்லோரும்
வேந்தரெனத் திரிவோம்;
சாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜென்ம மித்தேசத்திலெய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தினராயினுமொன்றே.
ஈனப் பறையர்களேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர் அன்றோ”
பாரதி எட்டயபுரத்தில் பிராமணக் குடும்பத் தில் பிறந்தவர்தான். ஆனால், இள வயதிலேயே அவருக்குத் தன் சாதி மீதே வெறுப்பு தோன் றியதற்கான காரணங்களும் இருந்தன. பாரதி தேச விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய பின்பு பகிரங்கமான பிராமண எதிர்ப்பாளரா கவே காட்சியளிக்கிறார். மரியாதையாகச் சொல்லும் போது அவர்களை பிராமணரென் றும், அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் போது பார்ப்பான் என்றும் அடைமொழி தரு கிறார். சாதிப்பிரிவினை தீண்டாமைக்கு சாத் திரங்களைத் துணைக்கழைத்துப் பாதுகாப்போர் பிராமணர்கள் தான் என்பதைக் கண்டறிந்து தான் பாரதி பிராமணர்களைக் கடுமையாய் சாடுகிறார்.
“சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்”
பிராமணர்களை பாரதியைப் போல வேறு யாரும் சாடியிருக்க முடியாது. சமூகத்தில் அநீதி களை தர்மம், நீதி என்று விதைத்து விஷ விருட் சமாய் வேரோடியதற்கு பிராமணர்கள் தான் காரணம் என்று பாரதி உறுதிபட நம்பியிருக் கிறார். அந்தக் கோபக் கனல்தான் அவரது கவிதைகளில் பிராமணர்களைச் சுட்டெரிக்கி றது. பாரதி இப்படியெல்லாம் பாடியதால்தான் பிராமணர்கள் அவரை இன்று வரை புறக் கணித்து வருகின்றனர் போலும்.
பாரதி பிராமணிய சனாதனத்தை எதிர்த்து எங்கெல்லாம் பாடல்புனைய முடியுமோ அங்கெல் லாம் பாடல் புனைந்திருக்கிறார். பிறப்பால் மேலோர், கீழோர் என்று பேதப்படுத்தும் சாத்தி ரங்களையெல்லாம் பொசுக்கச் சொல்கிறார். மனு தர்மத்தைச் சாடி ‘கண்ணன் பாட்டில்’ கூட எழுதியிருக்கிறார்.
“நான்கு குலங்கள் அமைத்தான் - அதை
நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்
சீலமறிவு தர்மம் - இவை
சிறந்தவர் குலத்தினிற் சிறந்தவராம்
மேலவர் கீழவரென்றே - வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் - இன்று
பொசுக்கிவிட்டால் எவர்க்கும்
நன்மை உண்டென்பான்.”
இவ்வாறு சாத்தியமான இடங்களிலெல்லாம் பாரதி மேல் சாதி அகந்தையை எதிர்த்து தனது குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் இந் திய விடுதலையைப் பற்றிக் கனவு கண்டார். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே “ஆடு வோமே பள்ளுப் பாடுவோமே - ஆனந்த சுதந் திரம் அடைந்து விட்டோமென்று’ பாடியவர். அந் தப் பாடலைக் கூட-
“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே”
என்று தான் தொடங்கித் துள்ளிக் குதிக்கிறார். விடுதலை விடுதலை என்று முழக்கமிடுகிறார்.
“பறையருக்கு மிங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கு
மறவருக்கும் விடுதலை”
என்று கூத்தாடுகிறார்.
மேலும் சுதந்திர இந்தியாவில் இழிவு கொண்ட மனிதரென்பது இந்தியாவில் இல்லை என்று அவர் கனவு கண்டார். ஆனால், அவர் கனவு நிறைவேறியதா என்பது சுதந்திர இந்தியா வில் அறுபதாண்டுகள் கடந்த பின்பும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
பாரதி ஏகாதிபத்திய எதிர்ப்பையும், வர்ணா சிரம எதிர்ப்பையும் ஏக காலத்தில் கொண் டிருந்தார். “தேசிய உணர்வு இன்றி அரசியல் விடுதலை இல்லை. சாதி உணர்வு இருக்குமிடத்தில் தேசிய உணர்வுக்கு இடமில்லை” என்று பாரதி குறிப்பிட்டுள்ளார். மேலும், “சமூக சீர்திருத்தம் இல்லாமல் அரசியல் சீர்திருத்தம் என்பது ஒரு கனவு. ஏனெனில் அரசியல் விடுதலையை சமூக அடிமைகள் ஒருபோதும் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார். சமூ கத்தில் நிகழும் அவலங்களை நீக்காமல் சுதந் திரத்தினால் என்ன பலன் கிடைத்து விடப் போகி றது என்பதே பாரதியின் கேள்வியாக இருந்தது.
மனுதர்மம் நால் வகைச் சாதி என்று குறிப் பிட்டாலும், பிராமணர்களைத் தவிர அனைவ ருமே சூத்திரவாள் என்றே அவர்களால் அழைக் கப்படுவதை பாரதி கொடுமையான செயல் என்று கண்டனம் செய்கிறார். பாரதி பிரா மணர்களுக்கெதிராகவும், சூத்திரர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த காலத்தில் நீதிக் கட்சி அரங்கிற்குள் வந்துவிட்டது. டாக்டர் டி.எம்.நாயர் அதன் ஸ்தாபகத் தலைவர்.
பாரதி பிராமணர்களுக்கெதிராக வன்முறை தூண்டப்படுவதை விரும்பவில்லை. இதுபற்றி அவர் “சென்னைப் பட்டினத்தில் நாயர் கட்சிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டிய தாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்ராய பேதமி ருந்தால் இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிபிடிவரை கொண்டு வரு வோர் இந்த தேசத்தில் இந்து தர்மத்தின் சக் தியை அறியாதவர்கள்” என்று தனது பஞ்சமர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். சாதிய ஒடுக்கு முறையில் பிராமணர்கள் மட்டுமல்லாது இதர உயர் சாதியினரும் ஈடுபட்டு வந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நாயர் கட்சியினர் ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் பிராமணி யத்தை எதிர்க்கிறோம் என்பதை பாரதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பாரதியின் கிருதயுகம்
இந்தியத் தத்துவ மரபில் கிருத, துவாபர, திரேதா, கலி என்று நான்கு யுகங்கள் கூறப்படு கின்றன. மார்க்ஸியம், ஆதி பொதுவுடைமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், முத லாளித்துவச் சமூகம் ஆகியவற்றுக்கு அடுத்து மீண்டும் பொதுவுடைமைச் சமூகம் வந்தே தீரும் என்று கூறுகிறது. இதையே வரலாற்றியல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் என்கி றோம். பாரதி இந்திய சனாதனத் தத்துவங்களை யும், லோகாயதப் பொருள் முதல்வாதத் தத்து வங்களையும் கரைத்துக் குடித்தவர். அவரிடம் லோகாயதப் பார்வையும் அழுத்தமாய் இருந்தது. அதன் விளைவாகவே பாரதி தனது பாடலில் -
“இடிபட்ட சுவர் போலே கலி வீழ்ந்தான்
கிருதயுகம் எழுக மாதோ “ என்று பாடுகிறார்.
மீண்டும் கிருத யுகத்தை எழுப்புகிறார். அதனால்தான் பாரதி முற்போக்காளர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கிறார்.

by kavin malar .