எல்லா நதிகளும் கடலை நோக்கி....
எல்லா மனித நேயப் பயணங்களும்
காரல் மார்க்ஸை நோக்கி.....!
Friday, June 6, 2008
"பிளாஷ்டிக் மனிதர்கள்"- கவிதை
"பிளாஷ்டிக் பூமி" கவிதை
பிளாஷ்டிக் மனிதர்கள்
எழுபது சதம் தண்ணீரால் ஆனது பூமி
ஆனாலும்
விலைக்குத்தான் கிடைக்கிறது, தண்ணீர்!
தினம் தினம்
பசியால் செத்துக்கொண்டிருக்கும்
பூமியின் கைகளில்
50 பூமிகளை அழிக்க காத்திருக்கிறது
அணு ஆயுதங்கள்..
விலைவாசியைக் கட்டுப்படுத்த தெரியாத
வெடகம் கெட்ட- எங்களுக்கு
ராக்கெட் விடத் தெரியும்!
மனித இனத்தைத் தவிர
எல்லா உயிரினங்களும் அழிகிறதாம்
அதனால் என்ன
மனிதர்களே வித விதமான மிருங்களானபோது..
சாப்பிடும் உணவு தானியங்களிலிருந்து
பெட்ரோல் எடுக்கிறதாம், அமெரிக்கா
எல்லாம் ''தீர்ந்த'' பிறகு
''அவர்களின்'' பெட்ரோல் தொட்டியில் நிரப்ப
உங்களின் இரத்தமும் கேட்டு வருவார்கள்
அதுவரை
நாம் மவுனமாக இருப்போம்...
ஆம்! நாம் மனிதர்கள்!
பிளாஷ்டிக் மனிதர்கள்!...
-ஆதிசிவம்,சென்னை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//எழுபது சதம் தண்ணீரால் ஆனது பூமி
ஆனாலும்
விலைக்குத்தான் கிடைக்கிறது, தண்ணீர்!//
செல்வேந்திரனின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
அடிக்கிற தண்ணிக்கு
அங்கங்கே கடையிருக்கு
குடிக்கிற தண்ணிக்கோ
குடமெல்லாம் தவமிருக்கு.
Post a Comment